உத்தரவை மீறி பேனர்கள் வைப்போர் மீது இனிமேல் குற்றவியல் புகார் அளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கோவை அவினாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள கட்டிடங்களில், மாநகராட்சி அனுமதியில்லாமல் கட்டிட உரிமையாளர்கள் தனியார் விளம்பர நிறுவனங்கள் மூலம் விளம்பர பலகைகளை அமைத்து வருகின்றனர்.
இதையடுத்து, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகள் நேரில் சென்று அந்த பேனர்களை அகற்றி, எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை சுமார் 6 முறை எச்சரித்தும், பேனர்களை அகற்றியும், தடை உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டதால், குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையாளர் பாபு கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தடையை மீறி பொது இடத்தில் பேனர் வைத்த விளம்பர நிறுவனத்தை சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, லட்சுமி மில்ஸ் அருகே தடையை மீறி பேனர் வைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கை எச்சரிக்கையால் உடனடியாக பேனர் அகற்றப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறும் போது: பொது இடங்களில் பேனர் வைக்க அரசு தடை செய்த நிலையில் ஒரு சில விளம்பர நிறுவனங்கள் வேண்டுமென்றே உத்தரவை மீறி பேனர்கள் வைத்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் பேனரை அகற்றினாலும், மறுநாளே வேறு பேனர்களை வைக்கிறார்கள். இதனால், எச்சரிக்கையை மீறி பேனர் வைப்போர் மீது இனிமேல் குற்றவியல் புகார் அளிக்கப்படும், என தெரிவித்தார்.