பஞ்சு விலை உயர்வு: கோவையில் துணை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் மனு…!

பஞ்சு விலை உயர்வால் தொழில் துறையினர் சந்தித்து வரும் நெருக்கடியான சூழல் குறித்து, கோவை விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை, இன்று மாலை தென்னிந்திய பஞ்சாலை சங்கத் தலைவர் ரவி சாம், நேரில் சந்தித்து மனு அளித்தார்.


கோவை: வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வால் தொழில் துறையினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சில நூற்பாலைகள் பகுதியளவு மட்டுமே இயங்கி வரும் நிலையில், இதே நிலை நீடித்தால் பல நூற்பாலைகள் இயங்குவதையே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழில்துறையினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வரலாறு காணாத இந்த பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இன்று உதகை செல்ல கோவை வந்துள்ள துணை குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



கோவை விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களை, இன்று மாலை தென்னிந்திய பஞ்சாலை சங்கத் தலைவர் ரவி சாம், நேரில் சந்தித்தார்.

அப்போது, பஞ்சு விலை உயர்வால் தொழில் துறையினர் சந்தித்து வரும் நெருக்கடியான சூழல் குறித்து துணை குடியரசு தலைவரிடம் எடுத்துக்கூறி, பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக மனு அளித்தார்.

அதே போல், கோவையில் இருந்து பிற மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு வான்வழி போக்குவரத்தை (Air connectivity) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் துணை குடியரசு தலைவரிடம் முன் வைத்தார். குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த உற்பத்திகள் மற்றும் இதர தொழில்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், கோவை விமான நிலையத்தில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு செல்ல முடியாதது வளர்ச்சிக்கு எவ்வாறு பின்னடைவாக உள்ளது என்பது குறித்து விளக்கினார்.

மேலும், வான்வழி போக்குவரத்தை அதிகரித்தால், ஏற்றுமதியை அதிகரிக்கலாம், எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலை சங்கத் தலைவர் ரவி சாம் துணை குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...