கோவை தனியார் பள்ளியில் நடந்த நிர்வாகிகள் தேர்தலில் தகராறு: தடுக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் வீடியோ வைரல்!

கோவை கண்ணப்பநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தேர்தலின் போது பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பள்ளியின் முன்னாள் தலைவரிடம் ஏற்பட்ட தகராறு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை கண்ணப்பநகர் பகுதியில் பொதுமக்கள் பங்களிப்புடன் சங்கமம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி என்ற ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மற்றும் சங்கமம் மெட்ரிகுலேஷன் என்ற எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் 150 உறுப்பினர்களுடன் சங்க விதிகளுக்குட்பட்டு தொடங்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தில் உறுப்பினர்கள் பலர் வெளியேறிய நிலையில் தற்போது 27 பேர் மட்டுமே ஆயுள் சந்தா நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சூழலில் நேற்று பள்ளி நிர்வாக தேர்தல் நடைபெற்றது. அப்போது தற்போது நிர்வாக குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இல்லாத சிலர் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்க வைப்பதாக கூறி உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு சென்ற பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் முன்னாள் தலைவர் சந்திரசேகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது இருவரும் ஒருமையில் பேசிக் கொண்டதுடன், திடீரென உதவி ஆய்வாளர், சந்திரசேகரின் சட்டையை பிடித்து வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், பெண் உதவி ஆய்வாளர் கையை தட்டி விட்டுள்ளார். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அங்கு நடைபெற்ற தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. முறையான விசாரணைக்கு பின் அல்லது நீதிமன்ற வழக்கு மூலம் தீரத்து கொள்ள அறிவுறுத்தி அங்கு கூடியவர்களை கலைய செய்தனர். இதனிடையே பெண் உதவி ஆய்வாளர் மற்றும் சந்திரசேகரிடம் ஏற்பட்ட தகராறு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...