நூல் விலை உயர்வு: கையில் கருப்பு பட்டை அணிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூக்கில் தொங்குவது போன்று ஆர்ப்பாட்டம்!

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டு தூக்கில் தொங்குவது போன்ற நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாத தொடக்கத்தில் 40 ரூபாய் வரை விலை உயர்ந்து தற்போது 470 ரூபாய் வரை நூல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இதனால் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வரக்கூடிய சூழ்நிலையில் உடனடியாக மத்திய அரசு இதனை கவனத்தில் கொண்டு பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.

நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தி மற்றும் நூலை அத்தியாவசிய பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் இன்றும் நாளையும் திருப்பூரில் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் உடனடியாக மத்திய அரசு தொழில் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கையில் கருப்பு பட்டை அணிந்து, நூல் விலை இதே போல் உயர்ந்து வந்தால் திருப்பூர் பின்னலாடை தொழில் முழுவதும் நலிவடைந்தால் தற்கொலை செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை சித்தரிக்கும் வகையில் தூக்கில் தொங்குவது போல நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...