வெள்ளலூர் குப்பை கிடங்கு மூலம் 150-டன் குப்பைகள் செல்லும் நிலையில் தினமும் 200-டன் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கு மூலம் தினமும் 200-டன் குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100-வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தினமும் 800-டன் முதல் 1000-டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.
இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீத்தேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும். இதனைத் தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளைக் குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69-மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டன.
இதில் 5-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதனிடையே, கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 10-ஆண்டுகளாக சுமார் 66-ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அழிக்கப்படாமல் இருந்தது. இதனை பயோ மைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதன் பயனாக 16-ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்காக தினமும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து 150-டன் வரை குப்பைகள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இதனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 150-டன் வரை எரிபொருள் பயன்பாட்டிற்கு என தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இதனை அதிகரிக்கும் பொருட்டு தினமும் 200 டன் வரை குப்பைகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் விரைவில் குறையும்" என்றார்.