கோவை வந்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு- மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து…!

இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.


கோவை: உலகமண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய துணை குடியரசு வெங்கையா நாயுடு கோவை வந்தார்.

அபுதாபியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உதகமண்டலம் செல்ல திட்டமிட்ட நிலையில், ஊட்டி, குன்னூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக அவர் கோவை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். இரவு கோவையில் தங்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நாளை காலை வானிலை பொறுத்து ஹெலிகாப்டர் அல்லது சாலை மார்க்கமாக உதகமண்டலம் செல்கிறார்.

அதன் பின் ராணுவ கல்லூரிக்குச் செல்கிறார், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர், பின் ராஜ்பவன் சென்றடைகிறார். அதனைத் தொடர்ந்து மே (18), புதன்கிழமை காலை லாரன்ஸ் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிறகு மீண்டும் ராஜ்பவன் சென்று ஓய்வெடுக்கும் அவர், மே 19 (வியாழக்கிழமை) உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கிறார்.

பிறகு மீண்டும் மே 20 வெள்ளிக் கிழமை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வருகிறார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். தொடர் மழை காரணமாக பயண திட்டத்தில் மாறுதல்கள் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...