கோவையில் நகர்ப்புற சுகாதார மையம்‌ கட்டுமானப்பணியை மேயர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

கோவைப்புதூர்‌, இடையர்பாளையம்‌ மற்றும்‌ போத்தனூர்‌ ஆகிய இடங்களில்‌ தலா ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்ப்புற சுகாதார மையம்‌ கட்டுமானப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோவை: கோவை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.92, 93-மற்றும்‌ 95-க்குட்பட்ட இடங்களில்‌ ரூ.4-கோடி மதிப்பீட்டில்‌, 7.77-கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு 60-இடங்களில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணிகள்‌ மற்றும்‌ கோவைப்புதூர்‌, இடையர்பாளையம்‌ மற்றும்‌ போத்தனூர்‌ ஆகிய இடங்களில்‌ தலா ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்ப்புற சுகாதார மையம்‌ கட்டுமானப்பணிகளையும்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்.92-மற்றும்‌ 93-க்குட்பட்ட மணிகண்டன்‌ நகர்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌கீழ்‌ (TNSUDP) ரூ.3.24-கோடி மதிப்பீட்டில்‌ 6.27-கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு 45-இடங்களிலும்‌, வார்டு எண்‌.95-க்குட்பட்ட திருமறை நகர்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்‌ (TNSUDP) ரூ.74.80-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 1.5-கிலோ மீட்ட்‌ தொலைவிற்கு 15-இடங்களில்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்று வருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌, செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.90-க்குட்பட்ட கோவைப்புதார்‌, வார்டு எண்‌.92-க்குட்பட்ட இடையர்பாளையம்‌, வார்டு எண்‌.95-க்குட்பட்ட போத்தனூர்‌ ஆகிய இடங்களில்‌ தலா ரூ.25-இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ நகர்நல மையம்‌ கட்டுமானப்பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும்‌, தரமானதாகவும்‌, செய்து முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இதனை தொடர்ந்து, 95-வது வார்டு போத்தனூர்‌ நகர்நல மையத்திற்கு சென்று ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வந்த நபர்களிடம்‌ குறைக்களை கேட்டறிந்தார்‌. பொதுமக்களிடம்‌ கனிவாக பேசவேண்டும்‌, தரமான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியாகளுக்கு அறிவுரை வழங்கினார்‌.



இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, தெற்கு மண்டல தலைவர்‌ ரெ.தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள்‌ பொ.இளஞ்சேகரன்‌, அப்துல்‌ காதர்‌, பாபு, ரமேஷ்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளர்கள்‌ கனகராஜ்‌, சதீஷ்குமார்‌, சபரிராஜ்‌, மண்டல சுகாதார ஆய்வாளர்‌ ராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...