கோவை மாநகராட்சி மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.3.24-கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்…!

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை பணிகள் நடைபெற்று வரும்ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவ்வப்போது திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 92, 93 வார்டுக்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில், 6.27 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



முறையாகச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் இளஞ்சேகரன், பாபு,அப்துல்காதர்,உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...