கோவையில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5-சவரன் செயின் பறிப்பு…!

சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மாடு மேய்க்க சென்ற மூதாட்டியிடம் 5-சவரன் செயின் பறித்து தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை எஸ்.எஸ்.குளம் கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பன்ன கவுண்டர், இவரது மனைவி மயிலாத்தாள் (79). இவர்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மயிலாத்தாள் மாடு மேய்ப்பதற்காக தோட்டத்தின் அருகே உள்ள சூரியன் அப்பிச்சி தோட்டத்தின் அருகே வந்து மாடுகளை கட்டிவிட்டு, அமர்ந்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் அந்த பகுதியில் விற்பனைக்கு நிலம் உள்ளதா? என கேட்டு பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கிளம்புவதாக கூறிய மர்ம நபர் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் வந்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5-சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இதனால் மயிலாத்தாள் சத்தம் போட்டதால் அங்கு பணியில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...