கோவை செல்வபுரம் அருகே பாட்டியை கொல்ல முயன்ற பேரன் கைது

கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவர், சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டு செலவிற்கு பணம் கேட்டு, கார்த்தி அவரது பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால், வட்டிக்கு பணம் வாங்கி அவர் பாட்டி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, கார்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திறிந்தது மட்டுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம், அவர் பாட்டி வட்டிக்கு வாங்கிக் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

இதில், பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அலறிய பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...