கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை:கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மல்லையசாமி (63). டெய்லர் கடை நடத்தி வந்தார். இவருக்கு பவானி சங்கர் (38), சத்திய நாராயணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி விஜயலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

மூத்த மகன் பவானி சங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அடிக்கடி தனது வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து உடைத்து வந்ததாகவும், அவ்வப்போது வெளி ஆட்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

மனைவி இறந்ததற்கு பிறகு இரு மகன்களையும் மல்லையசாமி கவனித்து வந்தார். ஒரு கட்டத்தில் மூத்த மகனை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மல்லையசாமி நேற்று இரவு மகன் பவானி சங்கருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மல்லையசாமி இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து பவானி சங்கருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவரும் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...