கோவையில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பிறருக்கு விற்பனை செய்கிறார்களா? மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு!

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருட்களை பிறருக்கு விற்பனை செய்கிறார்களா? என மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை:அண்மையில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது குற்றமாகும். இது பொது விநியோக திட்ட பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்ய வழிவகுக்கும். எனவே ரேஷன் பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1418 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் கடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் தங்களது ரேஷன் கார்டுக்கு பொருட்கள் பெற ஒரு நபரை அங்கீகரித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மூலம் வழங்கப்படும் அங்கீகார சான்று மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட் கார்டில் இல்லாத நபர் யாரும் ரேஷன் பொருட்களை பெற முடியாது.

இந்நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்கள் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்களை வாங்குகிறார்களா? ரேஷன் பொருட்களை வெளி நபர்களுக்கு விற்பனை செய்கிறார்களா? என கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படைகள் மூலம் ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது’’ என்றார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...