முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு 2 நாட்கள் கோவையில் நடக்கிறது!

முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு கோவை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 5 மையங்களில் நடைபெறுகிறது.


கோவை:தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று டான்செட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.



கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, மருதமலை சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பீளமேடு பகுதியிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் உள்ளிட்ட 5 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் எம்பிஏ பிரிவுக்காக 2921 பேர், எம்சிஏ பிரிவிற்காக 788 பேர், எம்இ மற்றும் எம் டெக் ஆகிய பிரிவிற்காக 693 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 396 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை எம்சிஏ பிரிவுகளுக்கான தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்பிஏ பிரிவுகளுக்கான தேர்வும் நாளை காலை 10 மணி முதல் 12 மணிவரை எம் இ மற்றும் எம் டெக் பிரிவுகளுக்கான தேர்வு நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...