தமிழக கவர்னருக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பி.எப்.ஐ. அமைப்பினர் மீது, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை:பாரதியார் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் ரவி கோவை வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பி.எப்.ஐ., அமைப்பினர் சார்பில் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக, சிறப்பு எஸ்.ஐ., மரியதாஸ் புகார்படி பெரிய கடைவீதி ஸ்டேஷனிலும், ஏட்டு அனந்தகிருஷ்ணன் புகார்படி, உக்கடம் போலீஸ் ஸ்டேஷனிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.