கோவையில் பொதுத் தேர்வு திருத்தும் பணி தயார் நிலை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா!

நடந்து வரும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் முடிய உள்ள நிலையில், மதிப்பீட்டு பணிகளுக்கான மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்துள்ளார்.


கோவை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. தேர்வுகள் முடிந்தவுடன் மதிப்பீட்டு பணிகள் துவங்க மையங்கள் தேர்வு செய்து, உரிய வசதிகள், பாதுகாப்புகள் இருப்பதை உறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய வி.சி.வி.சிசு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீ சௌடேஸ்வரி வித்யாலயா பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய மூன்று மையங்களும், பத்தாம் வகுப்பு மதிப்பீட்டு பணிக்கு கே.கே நாயுடு, சி.எஸ்.ஐ., மெட்ரிக், நாச்சியார் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...