சிட்ரா - குரும்பபாளையம் சாலை விரிவாக்கம்: நில எடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன!

கோவையில் சிட்ரா குரும்பபாளையம் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான நில எடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்று வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை:கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து நேரு நகர் அருகே காளப்பட்டி வழியாக குரும்பபாளையம் சந்திப்பு வருகிறது. இதன் வழியாக சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் சாலை உள்ளது. அது போல குரும்பபாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு, துடியலூர் சென்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி செல்லும் சாலை உள்ளது. சிட்ராவில் இருந்து காளப்பட்டி வழியாக சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இரண்டு முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் இவ்வழி அமைந்துள்ளது. இதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டிருக்கும்.

மேலும் விமான நிலையத்தில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் ஊட்டி செல்வதற்கு நேரு நகர் காளப்பட்டி வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்றடைந்து ஊட்டி செல்கின்றனர். இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் இருந்து கொண்டே இருப்பதை கருத்தில் கொண்டு சிட்ரா முதல் குரும்பபாளையம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. தற்போது இப்பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...