கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் ஆரஞ்சு பழங்கள்; உரிமம் ரத்து, அபராதம் விதிப்பு, வழக்கு - உணவு பாதுகாப்பு துறை

கோவையில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: நமது வாழ்வியலில் உணவே மருந்து என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய நிலை என்னவோ உணவு உட்கொள்வதாலே மருந்து உட்கொள்ள வேண்டிய நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டிருகின்றனர். இயற்கை விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து மகசூலுக்காக ரசாயன உரங்களால் காய்கறி பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இவ்வாறு விளை பொருட்கள் ஒரு புறம் உடல் நலத்துக்கு கேடு தருகின்ற நிலையில் அதன் ஊடாக விளைகின்ற பழங்களை பழுக்க வைக்கவும், நடக்கும் செயற்கை வழிமுறைகள் பெரும் இன்னலை தந்து வருகின்றன.

வழக்கமாக மாம்பழத்தை பழுக்க வைக்க உணவு பாதுகாப்பு விதிகளை மீறி கடை வியாபாரிகள் கால்சியம் கார்பைடு கல் (இரசாயன வேதி பொருள்) பயன்படுத்துகின்றனர். கைகளில் தொட்டாலே அனலை நாம் உணர்கின்ற அளவுக்கு வெப்பத்தை கக்கும் இந்த கல் வைத்து இயற்கைக்கு புறம்பாக பழுக்க வைக்கும் பழங்கள் ஆபத்தானது. ஆனால் இந்த கால்சியம் கார்பைடு கல்லை பயன்படுத்தினால் அதிகாரிகளிடம் எளிதாக மாட்டிக் கொள்கின்றனர். பொட்டலம் போட்டு கார்பைடு கல்லை பழ பெட்டிக்குள் வைப்பதுமே கடினமானதாக இருக்கின்ற நிலையில் அதனை எளிமையாக்கியிருக்கின்றன எத்திலின் ரைஃபனார்.

சீனாவில் தயாரிக்கப்படும் வேதியியல் ரசாயன பொருட்களும், கள்ள சந்தை வியாபாரமும்:

சீனாவில் தயாரித்து இந்திய கள்ள சந்தையில் உள்ளங்கை அளவு பொட்டலங்களாக விற்கப்படுகின்ற இந்த பவுடரை பொது வெளியில் பயன்படுத்தினாலும் வெளியில் தெரியாது. பெட்டியில் சிறு காகிதம் போல மறைத்துக் கொள்ளலாம். இது பழங்களை இயற்கைக்கு முரணாக பழுக்க வைக்கும். தற்போது மாம்பழ சீசன் என்பதால் கோவையில் உள்ள பழக்கடைகளை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழத்தில் இந்த எத்திலீன் வைத்திருப்பதை அறிந்து பறிமுதல் செய்தனர். மாம்பழம் மட்டுமல்லாமல் ஆரஞ்சு பழங்களையும் எத்திலீன் பவுடர் பயன்படுத்தி பழுக்க வைத்திருப்பதை ரெய்டின் போது பார்த்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழம் மற்றும் ஆரஞ்சு பழம்:

சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 12.5 டன் மாம்பழம் பறிமுதல் செய்த அதிகாரிகள் 2.5 டன் ஆரஞ்சு பழத்தை பறிமுதல் செய்து வெள்ளளூர் கிடங்கில் கொட்டப்பட்டு அழித்திருக்கின்றனர். உணவு பாதுகாப்பு விதி, வழி முறைகளை மீறிய 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் இயற்கை வழியில் பழுத்த பழம், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் பழங்கள் குறித்து செய்முறை விளக்கத்துடன் பேசியிருக்கிறார் .

வேதிப்பொருட்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழத்தின் நிலை:

அதனடிப்படையில் நல்ல முறையில் இயற்கையாக பழுத்த பழத்தின் காம்பு கருத்திருக்கும், பழத்தின் வண்ணமும் ஒரே வண்ணத்தில் இருக்கும். பெரும்பாலும் பழத்தை அறுக்கும் முன்னர் நல்ல மணம் வீசும். சுவைக்க அருமையாக இருக்கும். ஆனால் எத்திலீன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் வைத்து பழுக்க வைக்கப்படுகிற பழங்கள் பார்ப்பதற்கு பழுத்தது போன்று தெரியும். ஆனால் அந்த பழங்களில் சுவையோ, மணமோ இருக்காது. பழங்களின் உட்பகுதி பாதி பழுத்தும், பழுக்காமல் இருக்கும். பழ தோல் நிறம் மாறி மாறி காணப்படும்.

செயற்கை வழியில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களால் ஏற்படும் நோய்கள்:

வயிறு தொடர்பான அலர்ஜி, குடல் தொடர்பான நோய், தோல் நோய், கண் பார்வை குறைபாடுகள் மட்டுமின்றி , நரம்பு தளர்ச்சியும் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு ரசாயன வழி பழுத்த பழங்களை உட்கொள்வதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

ரசாயன உரத்தால் விளைகின்ற பழங்களும், ரசாயனத்தில் பழுக்க வைக்கப்படும் பழங்களும் - ஸ்லோ பாய்சன்:

அதிக மகசூலுக்காக ரசாயன உரத்தால் விளைவிக்கப்படுகின்ற நிலையில் அதன் பழங்களும் மீண்டும் ரசாயனத்தில் பழுக்க வைக்கும் நிலையில் அது முற்றிலும் விசமாகிறது. ஸ்லோ பாய்சன் என்று சொன்னால் மிகையாகாது. இந்த நிலையில் இயற்கைக்கு முரணாக ஏதேனும் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். தகவல் தெரிவிப்போரின் விவரம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்ற அதிகாரிகள், பழக்கடை வியாபாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.

உயிர் கொல்லியாக மாறும் பழங்களும் வியாபாரிகளின் லாப நோக்கமும்:

சில வியாபாரிகள் அவர்களுக்கே தெரியாமல் இரசாயனங்களை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தவும் திட்டம் தீட்டி இருக்கின்றனர். ஆனால் இரசாயனத்தின் விளைவுகளை பழக்கடை வியாபாரிகள் தெரிந்து கொண்டே லாப நோக்கத்துடன் எத்திலீன் ரைஃபனர் கால்சியம் கார்பைடு கல் இரசாயன பொருட்களை பயன்படுத்தினால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிப்பு, உரிமம் ரத்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை, பழக்கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...