கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும், பழகி வந்தனர். இந்த நிலையில் நசுருதீன் கடந்த 10-ந் தேதி சிறுமியிடம் திருமண ஆசை காட்டி அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி கர்நாடக மாநிலம் மைசூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இளைஞருடன் இருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நசுருதீன் சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் நசுருதீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.