நூல் விலையை ரூ.40 உயர்த்தியதால் திருப்பூரில் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் காணாமல் போகும்: தொழில்துறையினர் ஆதங்கம்!

ஸ்பின்னிங் மில்கள் தன்னிச்சையாக நூல் விலை கிலோவிற்கு ரூ.40 உயர்த்தியதால் திருப்பூரில் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் காணாமல் போகும் என்று ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா எம் சண்முகம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: இரண்டு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து புக்கிங் செய்யப்பட்ட பஞ்சு இறக்குமதி செய்யப்படும் என்றும் பஞ்சு விலை ஜூன் இறுதி முதல் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படும் சூழலில் நூல் விலையை தன்னிச்சையாக ஸ்பின்னிங் மில்கள் உயர்த்துவது ஏற்புடையதல்ல.

ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள மற்ற தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் என்றும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் பல காணாமல் போகும் எனவும் திருப்பூர் தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் பருத்தி நூலை நம்பி கைத்தறி விசைத்தறி திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் மிகச் சிறப்பாக விளங்கி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் பஞ்சு விலை மிக அதிகமாக உயர்ந்து வருவதை காரணம் காட்டி நூல் விலையை ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் தன்னிச்சையாக உயர்த்தியுள்ளனர். இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதி உள்ளிட்ட பருத்தி நூலை நம்பியுள்ள விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் மிகக் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இரண்டு மாதங்கள் ஸ்பின்னிங் மில்கள் பொறுமை காக்க வேண்டும், உடனடியாக நூல் விலையை குறைக்க வேண்டும் எனவும் திருப்பூர் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள நிறுவனங்கள் நல்லுறவை பாதிக்கும்!

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க (TEA) தலைவர் ராஜா எம் சண்முகம் கூறியதாவது:



பஞ்சு விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த பிரச்சனையால் ஒட்டுமொத்த ஜவுளித் தொழில் துறை பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஜவுளி தொழில் துறையை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கியது. இதனால் வெளிநாடுகளில் பஞ்சு அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் அவை இந்தியாவுக்கு வந்து சேரும். அதற்குப்பின் பஞ்சு விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் உயர்தர 40 சிகப்பு லேபிள் பின்னலாடை நூல் விலை ஒரு கிலோ 441 ரூபாயிலிருந்து 40 ரூபாய் உயர்த்தி 481 ரூபாயாக அதிகரித்துள்ளனர்.

இந்த திடீர் விலை உயர்வு திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களை நிலைகுலைய செய்துள்ளது. பஞ்சு விலை இரண்டு மாதங்களில் குறையத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த நெருக்கடியான சூழல் அனைத்து ஜவுளி சங்கிலி தொடரையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டு ஸ்பின்னிங் மில்கள் நூல் விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் தற்போது உயர்த்தப்பட்ட நூல் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லை என்றால் எதிர்வரும் காலங்களில் ஸ்பின்னிங் மில் மற்றும் ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள மற்ற தொழில் நிறுவனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும். அது எதிர்கால ஜவுளி தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே ஸ்பின்னிங் மில் தொழில் அமைப்புகளுக்கு எங்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நூல் விலை குறையும் என நம்புகிறோம். இந்நிலை நீடித்தால் திருப்பூரில் இயங்கி வரும் பல எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் காணாமல் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...