பொள்ளாச்சி அருகே பைக் மீது டெம்போ வேன் மோதி விபத்து - ஒருவர் பலி, மூன்று மாத குழந்தை உள்பட 2 பேர் காயம்!

பொள்ளாச்சி அருகில் மீன்கரை சாலையிலுள்ள குளத்துப்புதூர் பிரிவு பகுதியில் பைக் மீது டெம்போ வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 3 மாத குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் இமான் உசேன்(29).

இவர் தனது மனைவி நஸ்ரின் (26) மற்றும் மூன்று மாத ஆண் குழந்தையுடன் வடக்கஞ்சேரி பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மீன்கரை சாலையில் குளத்துப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குளத்துப்புதூர் பிரிவில் இருந்து வந்த டெம்போ வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற இமான் உசேன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த நஸ்ரின் மற்றும் 3 வயது ஆண் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற ஆனைமலை போலீசார் உயிரிழந்த இமான் உசேன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...