பொள்ளாச்சியில் உணவு பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: நகராட்சி அதிகாரிகள் அதிரடி உத்தரவு!

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரையில் அபராதமும், தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சில உணவகங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டீ, காபி, சட்னி, சாம்பார் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் கட்டி கொடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து உணவக உரிமையாளர்கள் உடன் நகராட்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் அனுமதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, பயன்படுத்துவது தெரிய வந்தால் கடையை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...