தனக்கென வரலாறு இல்லாத ஆர்.எஸ்.எஸ், தாஜ்மஹால் போன்ற வரலாறுகளை அழிக்க துடிக்கிறது - கோவையில் தமுமுக யாக்கூப் சாடல்..!

தாஜ்மஹால் அனைத்து மக்களுக்கு செல்லக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனக்கென வரலாறு இல்லாத காரணத்தால், இருக்கின்ற வரலாறுகளை தங்களுக்கான வரலாறாக மாற்ற முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ்மஹால் கட்டுவதற்காக அங்கிருந்த சிவன் கோவில் இடிக்கப்பட்டதாகவும், எனவே தாஜ்மஹால் இருக்கும் 22 அறைகளை திறந்து ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் கூறும் போது:-



தாஜ்மஹால் உலகின் தலைசிறந்த நினைவு சின்னமாகவும், அனைத்து மக்களுக்கு செல்லக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனக்கென வரலாறு இல்லாத காரணத்தால், இருக்கின்ற வரலாறுகளை தங்களுக்கான வரலாறாக மாற்ற முயற்சிக்கின்றனர். பாபர் பள்ளிவாசலை இடித்து அதன் மூலம் நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தினர்.

ஆட்சி முறையை சரியாக செயல்படுத்த முடியாமல், ஏழை எளிய மக்களுக்கு சிரமத்தை கொடுக்கக்கூடிய அரசாகவே செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனை தீர்வு காண முடியாத அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இதை மக்களிடையே மறைப்பதற்காக தாஜ்மஹால் உள்ளே சிலைகள் இருக்கின்றன என அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் அமைப்பு சட்டத்தை மட்டுமே பார்க்கின்ற நீதிபதிகளாக உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருவாய் துறை, அனைத்து துறையையும் தன் வசதியாக அமைத்துக் கொண்ட பாஜக அரசு நீதிமன்றத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது.

இந்நிலையில், மக்கள் அதிகமாக நம்பும் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்வு மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக எம்.பி ஒருவர் அர்த்தற்ற பேச்சை பேசுகிறார். தாஜ்மஹால் ஜெய்பூர் அரசுக்கு சொந்தமானது என கூறியுள்ளார், இதன் மூலம் 800 ஆண்டு காலம் முகலாயர்கள் ஆட்சியை மறைக்க முயல்கிறார்கள் என தெரிவித்தார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...