தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச டேப்லட்களை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் இந்தியாவிலேயே தமிழகத்தில் 11-மருத்துவ கல்லூரி கொண்டு வந்ததன் மூலம் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் அடைந்திருப்பதாகவும், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை என கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாகவும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் சவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை எனவும் அதுபோன்ற தடை விதிக்கவில்லை எனவும் ஆனால் பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். 340-கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க பொதுப்பணித் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ-மாணவியர்களிடம் பேசிய அவர் சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும் எனவும் சவாலான சூழ்நிலையில் கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...