கோவையில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் பேட்டி…!

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு பாரபட்சம் பார்க்க கூடாது என கோவையில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்:-



தமிழகத்தில் திமுக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. மேலும் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். தமுமுகவும் பாராட்டுகிறது. அதே நேரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையில் இஸ்லாமியர்களுக்கான அறிவிப்புகள் இல்லை அது வருத்தமளிக்கிறது.

அதே போல் எங்களது நீண்ட நாள் கோரிக்கையான 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை, இதற்காக அமைக்கப்பட்ட ஆதிநாராயணன் கமிஷன் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 தமிழர்கள் விடுதலைக்காக தமிழக அரசு வாதடி பரோல் பெற்று கொடுத்தது போல இஸ்லாமிய அரசியல் கைதிகளுக்கும் தமிழக அரசு பரோல் வழங்க வேண்டும் அப்போது எந்த ஒரு நிபந்தனையின்றி அவர்கள் பரோலில் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மசு மடங்கள் மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பசு பாதுகாவலர்களுக்கு என கூறும் பயங்கரவாதிகளுக்கு துணை போவது போன்ற அறிவிப்பாக உள்ளது. பாசு பாதுகாப்பு திராவிடல் மாடல் இல்லை என தமுமுக கருதுகிறது. ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டு இறைச்சி பிரியாணிக்கு அனுமதி இல்லை என தெரிவித்ததோடு எதிர்ப்பு எழுந்தவுடன் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர்.

இது உத்தரபிரதேசம், குஜராத் மற்றும் பாஜக ஆளும் மாநிலம் இல்லை இப்படிப்பட்ட தடையும் தேவையில்லை, தமிழக அரசு தலையிட்டு அனைத்து விதமான பிரியாணிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

பி.எப்.ஐ குறித்து ஆளுநர் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர் ஆளுநர் தன் வேலையை மட்டுமே பார்த்தால் போது, அண்ணா கூறியது போல் ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையற்ற ஒன்று தான் என தெரிவித்தார்.

கோவை டி.கே மார்க்கெட்டில் சாலை ஓர வியாபாரிகள் 88 வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டால் மாற்று இடம் கொடுத்து அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறுகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...