பட்டமளிப்பு விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த செய்திக் குறிப்பு கோப்பில் இருந்த 500-ரூபாயை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பத்திரிகையாளர்கள் திருப்பி கொடுத்தனர்.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகின்றது.

இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் பி.எச்டி., பட்டம் பெற்ற 1687-மாணவர்கள், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267-மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தை பெறவுள்ளனர்.

மேலும், 1,504-பேர் எம்.பில்., 1,50,424-பேர் இளநிலை பட்டமும், 48,034-பேர் முதுநிலை பட்டம் என மொத்தம் 2,04,362 மாணவ - மாணவிகள் பட்டங்கள் பெறவுள்ளனர்.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு, வந்த பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்ட செய்திக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பில் 500-ரூபாய் இருந்தது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எதோ லஞ்சம் கொடுப்பது போல் அமைந்த பல்கலைகழகத்தின் இந்த செயல், கோவை பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது என்று கண்டனங்கள் எழுந்தது.
இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு செய்திக் குறிப்பு கோப்பில் வைத்து கொடுக்கப்பட்ட 500-ரூபாயை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பத்திரிகையாளர்கள் திருப்பி கொடுத்தனர் அவர்களது கண்டங்களை வெளிப்படுத்தினர்.