கோவை உள்ளுர் திட்டக்குழுமத்தின் அங்கீகார அதிகார உச்ச வரம்பு உயர்வுக்கு கோவை கிரெடாய் அமைப்பு வரவேற்பு..!

கோவை மற்றும் பிற மாவட்டங்களின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். நன்மை அளிக்கக்கூடிய இந்த அரசின் முடிவை கிரெடாய் அமைப்பு வரவேற்கிறது.


கோவை: கோவையில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமத்தின் ஒப்புதல் அங்கீகார வரம்பை உயர்த்த வேண்டும் என அவ்வப்போது கோவை கிரெடாய் அமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர நகர்ப்புற துறை எண் 1858/UD2/2022-1 தேதி 21.04.2022 கொண்ட கடிதத்தின் படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கோவை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தின் இணை இயக்குநர் அதிக உயரமில்லாத கட்டிடங்கள் பிரிவில் (Non-High-Rise Buildings) குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான கட்டிடங்களுக்கு, 40,000-சதுர அடி வரை அனுமதி அளிக்கலாம்.

இதுகுறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில்:-



மக்களுக்கு வெகுவாக நன்மை அளிக்கக்கூடிய இந்த அரசின் முடிவை கிரெடாய் அமைப்பு வரவேற்கிறது. இதனால் கட்டிடங்களுக்கு அனுமதி விரைவாக கிடைக்கப் பெற்று கோவை மற்றும் பிற மாவட்டங்களின் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

மேலும், தமிழக அரசு 01.05.2022 முதல் சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி. சென்னையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த ஒற்றைச் சாளர முறையானது சம்பந்தப்பட்ட துறைகளின் செயல்பாட்டை திறம்பட ஒருங்கிணைத்து பொதுமக்கள் கட்டிடங்களுக்கு விரைவான ஒப்புதல் பெற வழிவகுக்கும் என்றார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...