தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவையில் தனியார் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நல்லாம்பாளயம் பகுதியில் அமைந்துள்ள, கல்பனா டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர், கணேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை, அவரது நிறுவனத்தின் வாயிலில் நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், சிறிது நேரம் கழித்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி கணேஷ் குமார், அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், மதியம் சுமார் 1.40 மணியவில் இருசக்கர வாகனத்தை லாவகமாக ஒருவர் திருடி செல்வது CCTV யில் பதிவாகி இருந்தது.
தன்னுடைய இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்சியடைந்த அவர், அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைராலகி வருகிறது. மேலும்,அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் பூட்டி வைத்த வாகனங்களை கூட லாவகமாக திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொதுமக்கள்,
வாகன திருட்டுகளில் ஈடுபடும் கும்பலகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையேல், வீட்டின் அல்லது கடையின் முன்பு வாகனங்களை நிறுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.