கோவையில் மாடியில் இருந்து விழுந்த வட மாநில தொழிலாளி உயிரிழப்பு - காரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை…!

மது போதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என சக தொழிலாளிகள் தெரிவித்த நிலையில், பிரதீப மாலிக் தவறி விழுந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் பேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பேரூர் பச்சாபாளையம் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளி மாடியில் இருந்து விழுந்து பலியான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், கட்டிட ஒப்பந்ததாரர். இவரிடம், வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மேல் மாடியில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து, அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். பின்னர், மறுநாள் காலை வெளியே வந்து பார்த்த போது, அறையில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீப மாலிக் (31) என்பவர் தரை தளத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பேரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வட மாநில தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அறையில் இருந்த சக தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், மது போதையில் அவர் தவறி விழுந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்த நிலையில், பிரதீப மாலிக் தவறி விழுந்தரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...