வரலாறு படைத்தது பருத்தி விலை-ஒரு கேண்டி ஒரு லட்சம்: 2 மாதங்களுக்கு பொறுமை காக்க 'சைமா', 'சிட்டி' தலைவர்கள் வேண்டுகோள்!

வரலாற்றில் முதல் முறையாக 356 கிலோ பஞ்சு உள்ளடக்கிய ஒரு கேண்டி ஒரு லட்சம் ரூபாய் தொட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆர்டர் கொடுத்து உள்ள பஞ்சு இந்தியா வந்து சேர இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை பொறுமை காக்க வேண்டும் எனவும் 'சைமா' மற்றும் 'சிட்டி' தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: விவசாயத்துக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது.

இந்திய ஜவுளி தொழில் கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழகம் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற ஜவுளி தொழில் மற்றும் அதன் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் பஞ்சு விலை ஏற்றத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி (Candy) பஞ்சு விலை சமீபத்தில் 95 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. இந்த அபரிமிதமான விலை உயர்வு ஒட்டு மொத்த ஜவுளி தொழில்களையும் முடக்கும் என்ற அபாய நிலை ஏற்பட்ட காரணத்தால் ஜவுளி தொழில் துறையினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பிரச்சினை குறித்து எடுத்துக் கூறினர். தொடர்ந்து பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்கினால் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து மத்திய அரசும் உடனடியாக பஞ்சு இறக்குமதிக்கான வரியை செப்டம்பர் 30 வரை முற்றிலும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் பஞ்சு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி(Candy) 'Shankar 6' ரக பஞ்சு இன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜவுளித் தொழில் வரலாற்றில் முதல் முறையாக பஞ்சு விலை புதிய வரலாறு படைத்துள்ளது.

இரண்டு மாதங்கள் பொறுமை அவசியம்:

தென்னிந்திய மில்கள் சங்க (SIMA) தலைவர் ரவிசாம் மற்றும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு (CITI) தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கூறியதாவது:



பருத்தி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் மிக நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. பருத்தி இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய புக்கிங் செய்த பஞ்சு இந்தியாவுக்கு வந்து சேர இரண்டு மாதங்கள் ஆகும். அதுவரை உள்நாட்டில் பஞ்சு விலை அதிகரிப்பு தொடர்ந்து காணப்படும். ஜூன் மாத இறுதியில் பஞ்சு விலை குறையத் துவங்கும். இந்த விலை உயர்வு ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாதித்துள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தினர் இரண்டு மாதங்கள் பொறுமை காக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...