கோவை அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் - உறுதி மொழி எடுத்து கொண்ட செவிலியர்கள்..!

இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி, மதம், இனம், மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.



கோவை: ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதியன்று இந்த சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளே உலகம் முழுக்க செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மருத்துவமனைகளில் செவிலியர் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் உள்ள செவிலியர் பள்ளியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களின் சார்பில் செவிலியர் தினம் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது.



மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செவிலியர்கள் செவிலியர் உறுதி மொழி எடுத்தனர்.



இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி மதம் இனம் மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதி தெரிவித்தனர்.



இந்நிகழ்வில் செவிலியர் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...