கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்…!

மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ்.


கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க மருத்துவமனை முதல்வருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.325-வழங்கப்படுகிறது.



கோவை மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.475-வழங்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்னும் ஊதிய உயர்வு செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனக் கூறி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தூய்மை பணியாளர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் மனுவை விசாரித்த ஆணையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், அடிப்படை வசதிகள் குறித்து 15-நாட்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

விளக்கமளிக்க தவறினால் சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...