திருப்பூரில் ரூ.2.17-கோடி மதிப்பீட்டில் மீன் சந்தையை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் தென்னம்பாளையம், சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


திருப்பூர்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவற்ற பல்வேறு திட்டப் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் 2.17 கோடி மதிப்பீட்டில் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை ஆகியவற்றை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி ஆணையாளர், கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...