தேர் திருவிழாவினை முன்னிட்டு திருப்பூரில் இருந்து கோவை செல்லும் மற்றும் கோவையில் இருந்து திருப்பூர் வரும் சாலைகளில் காவல்துறையினர் தற்காலிக மாற்றம் செய்துள்ளனர்.
திருப்பூர்: அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எனும் கோசத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் அமைச்சர் சாமிநாதன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த பெருங்கருணை நாயகியாக உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகும்.
சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமான, இக்கோயிலில் முதலை உண்ட பாலகனை மீட்டெடுத்த தலமான இக்கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா முதல் நிகழ்வாக கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி சூரிய, சந்திர வாசன காட்சி, 7-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூத அன்ன வாகன காட்சிகள், 8-ஆம் தேதி கைலாச வாகன, புஷ்ப விமான காட்சிகள் நடைபெற்றது.
9-ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63-நாயன்மார்களுக்கு காட்சி அளித்தல் ஆகியவை நடந்தது. 10-ஆம் தேதி கற்பகவிருட்சம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சிகள் நடைபெற்று நேற்று காலை 5.30-மணியளவில் பூர நட்சத்திரத்தில் சுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை 9-மணியளவில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முன்னதாக ஆகம விதிப்படி களின் தேருக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து நிகழ்வை துவக்கி வைத்தார்.

பின்னர் அவிநாசி மற்றும் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருபுறமும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் மதியம் 1-மணிக்கு தேர் வடக்கு ரதவீதியில் நிறுத்தப்பட்டது. நாளை இரண்டாவது நாளாக தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட உள்ளது.
14-ஆம் தேதி காலை அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 15-ஆம் தேதி தெப்ப தேரோட்டமும், 17- ஆம் தேதி நடராசப்பெருமான் தரிசனம் நடக்க உள்ளது. 18-ஆம் தேதி மஞ்சள் நீர் விழாவுடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது.
இன்று நடைபெற்ற தேரோடாட்டில் அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம் காரணமாக இன்று முதல் 3-நாட்களுக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைபெறும் போது தேர் வலம் வரும் வீதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.