மிக மோசமான சுந்தராபுரம் - மதுக்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் பணி தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகள் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளன.
கோவை மாவட்டத்தில் குறிப்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளில், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குடிநீர்த் திட்டங்கள், வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு, கேஸ் குழாய் பதிப்பு, ஆப்டிகல் பைபர் கேபிள் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவும் ரோடுகள் தோண்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலை கடந்த 1 வருடத்திற்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாகவும், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத தாலும், இந்த சாலை போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் சிட்கோ தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் அதிக அளவு போக்குவரத்து இருக்கும் சாலையை சீரமைக்காததால் வெறும் 2.5 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மோசமான சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதோடு, மழை காலத்தில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் கோவை நகரில் மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை ரோடுகளை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், 16 ரோடுகள் ரூ.140 கோடி மதிப்பில் சீரமைக்க நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவையின் மிக மோசமான சாலையாக விளங்கும் இந்த சுந்தராபுரம் - மதுக்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக்கும் பணி தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர்தலைமையில் நேற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சாலைகள், அடுத்த வாரத்தில் பணிகள் துவங்கவுள்ளன.
இந்த சாலையை சீரமைக்கும் பணிக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாநில நெடுஞ்சாலைத் துறையின் இடம் அளவீடு செய்யப்பட்டு, குறியீடுகள் வரையப்பட்டன. அப்போதுதான்சாலைக்கான இடங்களை, பெருமளவில் ஆக்கிரமித்து பெட்ரோல் பங்க், பேக்கரி, கடைகள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இவற்றில் பல கட்டடங்கள், பாதிக்கும் மேல் இடிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவை டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ் தலைமையில், வருவாய்த்துறையினர், இந்த சாலையில் நேரில் கள ஆய்வு செய்தனர். சில இடங்களில் அளந்தும் பார்த்தனர்.
இன்னும் ஓரிரு நாட்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்குமென்று, வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். சுந்தராபுரத்திலிருந்து 1.8 கி.மீ. துாரத்துக்கு இந்த ரோடு, இரு வழி பாதையிலிருந்து நான்கு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
இதில், 1.8 கி.மீ., தூரத்திற்கும் சென்டர் மீடியன் இடம்பெறும். அத்துடன், வாய்ப்புள்ள பகுதிகளில், நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகாலும், ஒரு சிறு பாலமும் கட்டப்படவுள்ளது.