கோவை வால்பாறை அருகே ஆண் சிறுத்தை சடலம் - மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பா? வனத்துறை தீவிர விசாரணை…!

வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சிறுத்தை, உயிரிழப்பு குறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் ஆண் சிறுத்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள வருவாய் நிலத்தில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தேனீர் கடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூட்டில் கால் சிக்கிய நிலையில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை காலை 7 மணிக்கு பார்த்துள்ளனர்.



இது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை இறந்து கிடந்ததை முதலில் புகைப்படம் எடுத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த ஆதாரங்களை பதிவு செய்தனர். பின்னர் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

மின்சாரம் தாக்கி சிறுத்தை உயிரிழந்தா? அல்லது விஷம் ஏதேனும் வைக்கப்பட்டதா? சிறுத்தை உயிரிழப்பு குறித்து வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...