திருப்பூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 60 டன் வாழைகள் கன மழைக்கு சேதம்: அரசு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகில் அறுவடைக்கு தயாராக இருந்த 60 டன் வாழைகள் பலத்த காற்று உடன் கூடிய கன மழைக்கு சேதமடைந்துள்ள நிலையில், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (47). இவர் ஒரு விவசாயி. பூமலூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயிரிடப்பட்ட நேந்திரன் வாழை காய்கள் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மரங்கள் அனைத்தும் சாய்ந்து சேதமடைந்தன. இதில், கிட்டத்தட்ட 60 டன் வாழைகள் சேதமடைந்துள்ளன.

கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்ப இருந்த நிலையில், சேதமடைந்துள்ள நிலையில் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தான் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயி பாலசுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.



இதேபோல், பல்லடம் வட்டாரம் முழுவதும் மழை காரணமாக பரவலாக வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ஆய்வு செய்து இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...