கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் மரம் விழுந்ததில் ஒருவருக்கு கால் முறிவு

இன்று கோவை கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்ததில், அங்கிருந்த பொதுமக்கள் மீது மரம் விழுந்த விபத்து ஏற்பட்டது. அதில், ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: இன்று கோவை கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்ததில், அங்கிருந்த பொதுமக்கள் மீது மரம் விழுந்த விபத்து ஏற்பட்டது. அதில், ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்து வருகிறது.



இந்நிலையில், கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வேலை நிமித்தமாக வந்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்துள்ளது. மரம் விழுந்ததில் அவருடைய கால் எழும்பு உடைந்து துண்டானது. அதேபோல், அருகில் இருந்த பெண் ஒருவர் மீதும் மரம் விழுந்ததில், அவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.



உடனே, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்திரப்பதிவுக்கு வந்த நபர் மீது மரம் விழுந்து கால் எலும்பு முறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்த பொதுமக்கள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்து, அவற்றை முன்கூட்டியே அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை வேண்டும் என்றனர்

மேலும், இன்னும் சில வாரங்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெற்கு மேற்கு பருவமழை ஆரம்பிக்க கூடும் என்பதால், இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...