கோவையில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் மீது வழக்குப்பதிவு…!

ஆயுதப்படை காவலர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மே 1-ஆம் தேதி வீட்டில் இருந்த தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவன் மற்றும் குழந்தையை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், அப்போது கோவைப்புதூரில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர் ரவி என்பவர் தன்னிடம் காதலிப்பதாக கூறி பழகியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரும் திருப்பூரில் ஒன்றாக தங்கியிருந்த நிலையில் தற்போது கோவைப்புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வாடகை வீட்டில் தங்கி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவத்தன்று காவலர் ரவிக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உடன் வாழ்ந்து வந்தது தெரியவந்ததாகவும், இதைக் கேட்ட போது தன்னை ரவி தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதால், மன உளைச்சலும் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஆயுதப்படை காவலர் ரவி மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...