கோவை சிறுமுகை வனச் சரகத்தில் இறந்த நிலையில் கண்டறியப்பட்ட 8 வயது ஆண் யானை- வனத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவை சிறுமுகை வனச்சரகத்தில் 8 வயதான ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அலுவலர் தலைமையில் தனிக்குழு பெத்திக்குட்டை பிரிவு, வரப்பள்ளம் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் சுமார் 8 முதல் 11 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இறந்த நிலையில் கண்டறியப்பட்ட ஆண் யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யானையின் இறப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னரே தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் இறந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...