கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் இருவருக்கு கத்தி குத்து…!

இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் இரண்டு பேர் கத்தியால் குத்திக் கொண்ட விவகாரம் தொடர்பாக இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப தகராறில் இருவருக்கு கத்தி குத்து ஏற்பட்ட நிலையில் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிருஷ்ண பிரகாஷ்(32). கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர் மெட்டிலா ஜெயராணி என்ற திருமண பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து ஜெயராணியின் கணவர் அந்தோனி பிரசாத்துக்கு தெரிந்ததால், அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக ஜெயராணி, கிருஷ்ண பிரகாஷுடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கிருஷ்ண பிரகாஷ் ஜெயராணியை தன்னுடன் பேச வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஜெயராணி தனது கணவர் மற்றும் அண்ணன் ஐவன் ஆகியோருடன் சென்று ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தனர்.



காவல் நிலையத்தில் புகாரளித்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரகாஷ் மது போதையில் வந்து ஜெய ராணியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, ஜெயராணியின் அண்ணன் ஐவன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளார்.



இதையடுத்து, அதே கத்தியை பிடிங்கி ஐவன், கிருஷ்ண பிரகாஷை குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.



இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கிருஷ்ண பிரகாஷ் மற்றும் ஐவன் ஆகிய இருவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...