உஷார் மக்களே… விழிப்புணர்வு வேண்டும்.. கோவையில் 'இரசாயனம்' மூலம் பழுக்க வைத்த பழங்கள் அழிப்பு..!

42-கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் ரூ.8 லட்சம் சந்தை மதிப்புள்ள 12-டன் மாம்பழம், 2-டன் சாத்துக்குடி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.



கோவை: கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12-டன் மாம்பழம், 2-டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிகாரிகள், கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுன்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 12 டன் 350 கிலோ மாம்பழம் மற்றும் 2 டன் 350 கிலோ சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம், இதையடுத்து ஆய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.





Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...