இதயங்கள் அறக்கட்டளைக்கு 'ரெப்போ ஹோம் பைனான்ஸ்' நிறுவனம் 25-லட்சம் ரூபாய் வழங்கல்..!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவ 'இதயங்கள் அறக்கட்டளைக்கு' 'ரெப்போ ஹோம் பைனான்ஸ்' நிறுவனம் 25-லட்சம் ரூபாய் வழங்கி உள்ளது.



கோவை: 'டைப் 1' சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் வகையில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் கார்ப்பரேட் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதயங்கள் அறக்கட்டளைக்கு 25-லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி எதிரே டாக்டர் ஜெகநாதன் நகரில் அமைந்துள்ள இதயங்கள் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' நிறுவனத்தின் மண்டல மேலாளர் முரளிதரன், உதவி பொது மேலாளர் சிஜு உள்ளிட்டோர் இதயங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் காசோலையை வழங்கினர்.

நிகழ்ச்சியில், இதயங்கள் அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி பெறும் ஏழை குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் தங்களின் அனுபவங்கள் குறித்து பேசினர்.

'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' நிறுவனத்தின் மண்டல மேலாளர் முரளிதரன் பேசியதாவது:-

எங்கள் நிறுவனத்தின் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தலைமையில் எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை எங்கள் நிறுவனம் சார்பில் செய்து வருகிறோம்.

இதயங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் உன்னத பணிக்கு உதவும் வகையில் ஏற்கனவே 25-லட்சம் ரூபாய் வழங்கினோம். அவர்கள் பணி சிறப்பாக தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் மேலும் பல ஏழை குழந்தைகள் மருத்துவ உதவி பெற உதவும் வகையில், தற்போது மீண்டும் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதயங்கள் அறக்கட்டளை' நிறுவனத் தலைவர் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், டாக்டர்.கிருஷ்ணன் சுவாமிநாதன், கூறியதாவது:-

சர்க்கரை நோய், 'டைப் 1' மற்றும் 'டைப் 2' என இரண்டு வகைப்படும். பொதுவாக பலருக்கு 'டைப் 2' சர்க்கரை நோய் பாதிப்பு தான் அதிகம் காணப்படும். 'டைப் 1' சர்க்கரை நோய் என்பது மிகவும் அபாயகரமான நோயாகும்.

1 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, கண் பார்வை குறைபாடு, அதிக பசி உள்ளிட்டவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்த நோயை துவக்கத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள தவறினால் 'டயபடிக் கோமா' என்று சொல்லக்கூடிய நிலைக்கு சென்று மரணம் ஏற்படும்.

இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்படும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி இலவசமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'இதயங்கள் அறக்கட்டளை' துவங்கி நடத்தி வருகிறேன்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு எங்கள் அறக்கட்டளை சார்பில் இன்சுலின் மற்றும் மருந்து பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' நிறுவனம் சார்பில் முதல் கட்டமாக 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது அதனால் 100 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி பொருட்கள் வழங்க முடிந்தது. தற்போது மீண்டும் அவர்கள் வழங்கியுள்ள 25 லட்சம் ரூபாய் நிதி உதவியால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்படும்.

அதிநவீன மற்றும் அதிக விலை கொண்ட இன்சுலின் பம்ப் ஐந்து குழந்தைகளுக்கு வழங்க உள்ளோம்.

நாங்கள் மேற்கொண்டு வரும் பணியை கண்காணித்து அதற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி நிதி உதவி அளித்து வரும் 'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' நிறுவனத்துக்கு 'இதயங்கள் அறக்கட்டளை' குழுவினர் மற்றும் பயனாளிகள் சார்பில், மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் மேற்கொண்டு வரும் உன்னதமான பணிக்கு உதவி அளிக்க விரும்பும் கருணை உள்ளம் கொண்டவர்கள் எங்கள் அறக்கட்டளையை 9042858882, 8526421150 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...