கோவையில் வீட்டில் இருந்த 14-சவரன் நகைகளை திருடிய பணிப்பெண் கைது..!

14-சவரன் நகைகளை மீட்டு, பணிப்பெண்னை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.


கோவை:கோவையில் வீட்டில் இருந்த 14-சவரன் நகைகளை திருடிய பணிப்பெண்னை போலீசார் கைது செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல் (54) விவசாயி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் இரவு வந்து பார்த்தபோது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. ஆனால் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த போது நகைகள் மாயமானதால், சந்தேகமடைந்த கிரி கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி (32) என்பவர் போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கிரி கதிர்வேல் உள்ளிட்டோர் வெளியே சென்ற, பிறகு வீட்டின் அருகே வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 14-சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, அவரிடம் இருந்த 14 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ரேவதி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...