கோவையில் காட்டு பன்றி குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி பலி….!

கோவை தடாகம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றி குறுக்கே வந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



கோவை: வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு பன்றி குறுக்கே வந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போதுதிருவள்ளுவர் நகரை அடுத்த நர்சரி பகுதியில் வந்த போது, வனப்பகுதியில் இருந்துகாட்டு பன்றி ஒன்று கீழே இறங்கிச் சாலையைக் கடந்து உள்ளது.

அப்போது இருசக்கர வாகனத்தை நிறுத்த முடியாமல் சென்ற நிலையில் காட்டுப்பன்றி இருசக்கர வாகனத்தின் மீது உரசி சென்றுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார்நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...