கோவை அருகே சாலையில் சென்ற ஆடுகள் மீது லாரி மோதி விபத்து - 43 ஆடுகள் பலி….!

நள்ளிரவு 2 மணிக்கு வேலந்தாவளம் அருகே உள்ள வழுக்கல் வளைவு அருகே வந்த போது, எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது.


கோவை: கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனக்கு சொந்தமாக 400ஆடுகளைகேரளாவில் இருந்து நாகராஜ், ஆறுமுகம், முத்து ஆகிய மூன்று பேர் மூலம் கோவை சூலூர் நோக்கி சாலையில் வழியாக மேய்து வந்துள்ளனர்.

அப்போது, வேலந்தாவளம் அருகே உள்ள வழுக்கல் வளைவு அருகே நள்ளிரவு 2 மணிக்கு வந்த போது,எதிரே சூலூரில் இருந்து இரும்பு கம்பி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியது.



இந்த விபத்தில் 43 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. 15 ஆடுகள்காயமடைந்துள்ளது. மற்ற ஆடுகள் பயந்து சாலை அருகே இருந்த காட்டுக்குள் இறங்கியது. இந்த விபத்தில் ஆடுகளை ஓட்டி வந்தவர்களுக்கு எந்த காயமும் இல்லை.



விபத்து தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரான கேரளா மாநிலம் ஒத்தப்பாலத்தை சேர்ந்த முகமது ரம்மி என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...