உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகள் பறிமுதல் - விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அறிக்கை…!

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த உகாண்டா பெண்ணிடம் ரூ.2.67 கோடி மதிப்பிளான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



கடந்த 6 ஆம் தேதி சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் போதை பொருட்களுடன் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ட்ரா நன்டேஷா (30) என்ற பெண்ணை விமான நிலைய நுண்ணறிவு போலீசார் பிடித்து சோதனை செய்து, அவர் போதை மாத்திரையுடன் வந்ததை கண்டறிந்தனர்.

இதையடுத்து, இன்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது குறித்து விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா பெண் தனது வயிற்றில் வைத்து கொண்டு வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



அதில் 81 மாத்திரையில் சுமார் 892 கிராம் இருந்துள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.2.67 கோடி என்பது கண்டறியபட்டுள்ளது. மேலும், அந்த பெண் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...