கோவையில் அரசு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவம்: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தர்ணா; மக்கள் அவதி

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் ப‌ர‌ப‌ர‌ப்பு நிலவியது.



கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்து ஓட்டுனர், அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதால், 50 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படாமல், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் ப‌ர‌ப‌ர‌ப்பு நிலவியது.



மேலும், மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்புவோர் பேருந்துகள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்தனர்.

உக்கடத்தில் இருந்து வெள்ளமடை வரை சென்று வரும் எண் 45 கொண்ட தனியார் பேருந்து, இன்று மாலை காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் போது, 3H என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வழி விடவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தனியார் பேருந்து ஓட்டுனர் சந்தோஷ் மற்றும் நடத்துநர் வெங்கடேஷ் அரசு பேருந்து ஓட்டுநர் கார்த்திகை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



இந்த சம்பவத்தை கண்டித்து காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் நடத்தின‌ர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.



இதையடுத்து, பேச்சுவார்த்தையில் உட‌ன்பாடு ஏற்பட்டதால், 2 மணி நேரத்துக்கும் மேல் தர்ணாவில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பேருந்துகளை இயக்கின‌ர்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காட்டூர் போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் இரு நடத்துனர்கள் மீது IPC 294(b), 323, 332 and 506(i) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

காயமடைந்த, அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திக் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தாக்குதல் மற்றும் தர்ணா சம்பவத்தால், காந்திபுர‌ம் பேருந்து நிலைய‌ம் ம‌ற்றும் சுற்றி உள்ள‌ அனைத்து ப‌குதியிலும் கடும் பேக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌ட்ட‌து.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...