இலங்கையில் ராஜபக்சே பதவி ராஜினாமா: கோவையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் மூண்டது.

இந்த கலவரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, போலீசாருக்கு உதவ,ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டங்கள் வெடித்துள்ள சூழலில், ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தனி ஹெலிகாப்டரில் ஏறி தப்பியோடினார் என கூறப்படுகிறது.

திங்கட்கிழமை, இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் மகிந்த ராஜபக்சேவின் வீடு எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அவரது ராஜினாமாவை கொண்டாடும் விதமாக, கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை மக்களே ராஜபக்சே ராஜினாமா செய்ததை கொண்டாடி வரும் சூழலில், கோவையில் இடது சாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இன்று, கோவை சிங்காநல்லூரில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஒன்றுகூடிய முற்போக்கு அமைப்பினர் சாலை நடுவே பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1.5 லட்சம் அப்பாவி தமிழகர்களை கொன்று குவித்த ரஜபக்சே உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளார். சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படுகிறார். இதனை கொண்டாடும் விதமாகவே பட்டாசுகள் வெடித்தோம்." என்று கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...