கோவையில் சாலையில் சென்ற இருசக்கர வாகனம், மின்கம்பத்தில் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு…!

பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.


கோவை: சேலம் மாவட்டம் நடுப்பட்டி சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன் (56). இவரது மகன் ரஞ்சித் குமார் (26). கோவை கணேசபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது இருசக்கர வாகனத்தில், கோவை - அன்னூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ராகவேந்திரா கல்யாண மண்டபம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று சித்ரா பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் 2 மணி அளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...