அசானி புயல் எதிரொலி: கோவை - சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிப்பு இல்லை.!

சென்னையில் இருந்து செல்லும் விமான போக்குவரத்தில் பாதிப்பு இருக்கும், என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: "அசானி" புயல் காரணமாக விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்திலும் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புயல் தாக்கம் அதிகம் இருக்கக்கூடும் இடங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு இருக்கும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்பட்டு வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்று 7 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. காலை ஒரு விமானம் மட்டும் 10 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கியுள்ளது.

அதேபோல, மாலை 4:00 மணி நிலவரப்படி, நேற்று காலை முதல் பயணிகள் மத்தியில் கோவை சென்னை இடையே விமான சேவை தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற குழப்பமான சூழல் நிலவிய காரணத்தால், பயணிகள் விமான நிலையம் மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு போன் செய்து தகவல் கேட்டபடி இருந்தனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...